Saturday, May 13, 2017

காவேரி புஸ்கரம்

இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.



காவேரி புஸ்கரம்


காவேரி நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும். . இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாட படுகிறது. அதாவது குரு பகவான் துலாம்  ராசிக்குள் பிரவேசிக்கும் அந்த பனிரெண்டு நாட்கள் காவேரி புஸ்கரம் கொண்டாடப்படுகிறது. இது வரும் செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த காலங்களில் குரு பகவான் காவேரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு (2017) வரும் காவேரி புஷ்காரமானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகா காவேரி புஷ்காரம் ஆகும்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு:–
-----------------------------------------------------------
  • தலைக்காவேரி (Talakaveri) - (கர்நாடகா)
  • பாகமண்டலா  ( Bhagamandala) - (கர்நாடகா)
  • குஷால் நகர் (Kushalnagar) - (கர்நாடகா)
  • ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) - (கர்நாடகா)
  • கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) - (கர்நாடகா)
  • மாண்டியா (Mandya) - (கர்நாடகா)
  • ஷிவனசமுத்திரா (Shivanasamudra) - (கர்நாடகா)
  • பன்னூர் (Bannur) - (கர்நாடகா)
  • திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) - (கர்நாடகா)
  • தலக்காடு (Talakadu)
  • முடுகுத்தூர் (Mudukuthore) - (கர்நாடகா)
  • கனகபுர் (Kanakapur) - (கர்நாடகா)
  • மேட்டூர் (Mettur)  - (தமிழ்நாடு)
  •  பவானி (Bhavani) - (தமிழ்நாடு)
  • பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) - (தமிழ்நாடு)
  •  கொடுமுடி (Kodumudi) - (தமிழ்நாடு)
  • பரமத்தி வேலூர் (Paramati Velur)- (தமிழ்நாடு)
  • ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)- (தமிழ்நாடு)
  • திருவையாறு (Thiruvaiyaru)- (தமிழ்நாடு)
  • தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
  • சுவாமிமலை (Swamimalai) - (தமிழ்நாடு)
  • கும்பகோணம் (Kumbakonam)- (தமிழ்நாடு)
  • மயிலாடுதுறை (Mayavaram) - (தமிழ்நாடு)
  •  பூம்புகார் (Poompuhar) - (தமிழ்நாடு)
   
நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!

- பிரவின் சுந்தர் பூ.வெ.